பெற்றோரின் விவாகரத்தும், அதன் தாக்கமும்


    தாயை இழக்கும் போது பாசத்தையும், தந்தையை இழக்கும் போது பாதுகாப்பையும் இழக்கிறோம். இந்தச் சொற்றொடர் பெற்றோர்களின் இறப்புக்கு மட்டுமல்லாமல், அவர்களின் பிரிவுக்கும் பொருந்தும். பெற்றோர்களின் பிரிவு ஒரு குழந்தையைப் பல வழிகளில் பாதிக்கிறது. விவாகரத்தானப் பலரின் குழந்தைகளுக்குக் கல்வியில் நாட்டம் குறைகிறது. இதற்கு முக்கியக் காரணம் குழந்தைகளால் புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதே ஆகும். புதிய குடும்ப இயக்கவியல், புதிய வீடு, நண்பர்கள், மற்றும் பள்ளிக்கூடம் போன்றவற்றால் அவர்கள் தாக்கப்படுகின்றனர். இதுவே நாளடைவில் அவர்களைத் தீய வழிக்கு இட்டுச் செல்கிறது. தீய நண்பர்களின் சேர்க்கையால் அவர்கள் போதைப் பொருட்கள் மற்றும் பல சட்ட விரோத செயல்களுக்கு அடிமை ஆகின்றனர். அதுமட்டுமின்றி, விவாகரத்தானவர்களில் பத்தில் ஒருவரின் குழந்தைக்குத் திருமணம் மற்றும் குடும்பத்தின் மீது நம்பிக்கை இழப்பு ஏற்படுகின்றது என்று ஆய்வு காட்டுகிறது. ஆகவே, விவாகரத்துச் செய்ய முடிவெடுக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது இன்னும் பல மடங்கு பாசத்தையும் அக்கறையும் காட்டி, அவர்களின் வாழ்வை நல்வழிப் படுத்த வேண்டும். more info

Comments

Post a Comment

Popular Posts